டேகெல்லாங் , மத்திய பாலி
Translated into Tamil by Santhipriya : தமிழில் மொழி பெயர்ப்பு : சாந்திப்பிரியா
'டேகெல்லாங்' (Tegallalang) என்ற கிராமம் 'உபுட்டின்' (Ubud) வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த கிராமம் மரக் கட்டைகளில் சித்திர வேலைகள் (woodcarving) செய்வதற்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்குள்ள பலருக்கும் இதுவே தொழில்.
இங்கிருந்து 3 கிலோ தொலைவில் உள்ளது 'கெபோன்' (Kebon) என்ற இடம். ஒரு காலத்தில் 'கென்டேரன்' (Kenderan) என்ற பகுதி சிறு ராஜ்யமாக இருந்ததால் இன்றும் 'கென்டேரனில்' பல தனவந்தர்கள் உள்ளனர். 'கென்டேரனில்' இருந்து 4 கிலோ தொலைவில் உள்ளதே 'மனுஅபா ' (Manuaba) எனும் இடம். இங்கு 'பூர க்ரிய சக்தி' (Pura Griya Sakti) என்ற பெயரில் பிரும்மாவின் ஆலயம் (Brahman temple) உள்ளது.
'கென்டேரனில்' இருந்து 1 கிலோ தொலைவில் உள்ள 'கபிடு' (Kapitu) என்ற கிராமத்தில் உள்ளது 'டெலிகா வஜா' (Telaga Waja) என்ற நீர்வீழ்ச்சி. இந்த இடம் ஆயிரம் வருடங்களுக்கு (thousand years) முன்னர் புத்த மதத்தினர் வந்து தங்கிய இடம் என்கிறார்கள்.
Location Map of Tegallalang
'டேகெல்லாங்' உள்ள இடத்தைக் காட்டும் தரை படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
|
|
|